தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்

குளிர்சாதன பேருந்துகள் தூய்மை படுத்தி, பழுதுபார்க்கப்பட்டு நாளை முதல் இயக்குவதற்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

Update: 2021-09-30 07:52 GMT

பைல் படம்

தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கப்படுமென அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அமல் படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, குளிர்சாரதன பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் கடந்த ஜூன் மாதம் முதல் இயக்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் குளிர்சாரதன பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், அரசு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றது. இந்நிலையில், குளிர்சாதன பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பயணிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதுகுறித்து பரிசீலனை செய்து வருகிற அக்டோபர் முதல் தேதியில் இருந்து கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் 702 அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.கொரோனா பரவலால் கடந்த மே 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களுடன் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்குகிறது.  குளிர்சாதன பேருந்துகள் தூய்மை படுத்தி, பழுதுபார்க்கப்பட்டு நாளை முதல் இயக்குவதற்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றன. நாளை முதல் அவை இயக்கப்பட இருக்கின்றனர்.

ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்றும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர் சாதனப் பேருந்துகள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட் இருப்பதால் அவற்றை தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகளில் போக்குவரத்து பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள குளிர்சாதனப் பேருந்துகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகின்றன.


Tags:    

Similar News