நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மறைந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அவரது மகன் ராம்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரை வெற்றிகரமாக முடிந்தது. ஜூலை21-ஆம் நாள் நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி இந்த ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.