வாக்கு எண்ணிக்கை நாட்களில் முழு ஊரடங்கு ..?

-சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை;

Update: 2021-04-27 02:48 GMT

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களான மே 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளிலும் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

மே 2-ம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதற்கு முந்தைய நாளில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு மக்கள் அதிகளவில் கூடினால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அதனைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே அன்றைய நாள்களில் ஊரடங்கை பிறப்பிக்க நீதிமன்றம் பரிந்துரைப்பதாகவும், இதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர்களுக்கு மட்டுமே அன்றைய நாள்களில் அனுமதி வழங்கலாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News