பெற்றோர் கண்டித்ததால் விரக்தி: 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றத்தில் பெற்றோர் கண்டித்ததால் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-09-07 06:40 GMT
பெற்றோர் கண்டித்ததால் விரக்தி: 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பைல் படம்.

  • whatsapp icon

செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி(வயது 14). இவர், அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா பரவல் சற்று குறைந்து இருப்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் சிவசக்தி, சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிவசக்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News