சென்னை மாநகராட்சி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி - அமைச்சர் சேகர்பாபு

Update: 2021-05-16 06:03 GMT

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. எனவே சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பரிசோதனைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமெடுத்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி சார்பில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் 50-60 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி போடாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி அறிவுறுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

Tags:    

Similar News