அம்பேத்கர் சிலைக்கு நீதிபதிகள் மலர் தூவி மரியாதை
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அவரது சிலைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மலர் தூவி மரியாதை;
டாக்டர் அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது . தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா, நிர்மல்குமார், சாத்தி குமார் சுகுமார குரூப், உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) இந்துமதி, வக்கீல்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற பதிவாளர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.