ஹைதராபாத்தில் மோசமான வானிலையால் விமானங்கள் தாமதம்: கவர்னர் தமிழிசை அவதி
ஹைதராபாத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதில் கர்வனர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 169 பயணிகள் அவதியடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக திருப்பதியிலிருந்து 69 பயணிகளுடன் ஹைதராபாத் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,ஹைதராபாத்தில் தரையிறங்க முடியாமல் நேற்று இரவு 11 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் வந்து தரையிறங்கியது.
அதன் பின்ப அங்கு வானிலை சீரடைந்த பின்பு இன்று அதிகாலை ஒரு மணிக்கு மீண்டும் சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.
அதைப்போல் ஹைதராபாத்திலிருந்து நேற்று இரவு 11 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தது.அந்த விமானத்தில் தெலுங்கானா மாநில கவா்னா் தமிழிசை சவுந்திரராஜன் உட்பட 169 பயணிகள் வந்தனா்.
மேலும் சென்னையிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு 129 பயணிகளுடன் ஹைதராபாத் செல்ல வேண்டிய ஏா் ஏசியா விமானம் 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. பயணிகள் கடும் அவதியடைந்தனர்.