பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் 25 ம் தேதி துவக்கம்
பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 25 ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.;
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திதார் அப்போது பேசிய அவர் கூறியதாவது;
பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் 25ம் தேதி துவங்குகிறது.
அண்ணா பல்கலைகழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சென்ற ஆண்டுகளில் 21000 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை 31000 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் இருக்கும் நிலை இருக்காது. அண்ணாபல்கலை கழகத்தில் பயோடெக்னாலஜி படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த பல்கலை கழகத்திலும் பின்பற்றபடாது.
பயோடேக்னாலஜி படிப்புக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை வழங்க மத்திய உயர்கல்வி துறை அமைச்சகத்துக்கு முதல்வர் விரைவில் கடிதம் எழுத உள்ளார். மத்திய அரசு உதவி தொகை வழங்கினாலும் வழங்காவிட்டால் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் படியே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இதுவரை 5970 பேர் சேர்ந்துள்ளனர். அடுத்த கட்ட கலந்தாய்வுகள் மூலமாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறும் கல்வி கட்டணம் விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த இட ஒதுக்கீட்டில் சேர கூடிய மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
வரும் காலத்திலும் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால் 3443 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் என அறிவிதிருந்த நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.