குஷ்பு எப்படி மதம் மாறினார் என்பது தெரிய வேண்டும்: கே.எஸ். அழகிரி
குஷ்பு எப்படி மதம் மாறினார் என்பது தெரிய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதற்கான பல்வேறு காரியங்களை செய்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக இந்திய ஆட்சி பணி சட்டத் திருத்தம் 1954ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்திய ஆட்சி பணி அமைப்பில் பணியாற்றும் அதிகாரிகள் மாநில அரசு பணியில் இருந்து மத்திய அரசு பணிக்கு மாற்றும் போது மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும். இந்த நடைமுறையை 60 ஆண்டுக்காலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பின்பற்றப்பட்டது.
கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய- மாநில அரசுகள் இணைந்து தான் செயல்பட முடியும். ஒரு அரசு இல்லாமல் மற்றொரு அரசு செயல்பட முடியாது. இப்படி தான் ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்தப்பட்டது. மத்திய பா.ஜ.க. அரசு திருத்தம் கொண்டு வருவதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றை அழிப்பது எளிது. ஆனால் உருவாக்குவது கடினம் என மேற்கொள் காட்டி கண்டித்து உள்ளார்.
இந்திய அரசியலமைப்பு கவனமாக உருவாக்கப்பட்டது. இதை சிதைக்க முயற்சிக்கிறார்கள். மத்திய- மாநிலத்திற்கும் இடைய உள்ள உறவு பாலம் சிதைக்கப்படும். அதிகாரிகள் பணியாற்ற முடியாத சூழல் உருவாகும். இந்த சட்ட திருத்ததை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
குஷ்பு எப்படி மதம் மாறினார் என்பது தெரிய வேண்டும். குஷ்புவின் முன்னோர்கள் எப்படி மதம் மாறினார்கள் என்பது தெரிய வேண்டும். மதம் யாரையும் வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது. ஒருவர் தான் விரும்பும் இறை வழிப்பாட்டை, சித்ததாத்தம், மதத்தை ஏற்று கொள்ளலாம் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று கருத்து இல்லை.
அந்த சுதந்திரத்தை அரசியலமைப்பு தந்து உள்ளது. மாணவி லாவண்யா விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது. மாணவியின் பேட்டியில் 2 ஆண்டுகளுக்கு முன் வற்புறுத்தியதாக சொல்லுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன் நடந்ததற்கும் இப்போது நடந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. அது போல் ஒரு அழுத்தம் இருந்ததால் அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.
ஒக்கனேக்கல் குடிநீர் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் குடிநீர் திட்டங்கள் ஆறுகளில் இருந்து செய்யப்பட்டு உள்ளன. இதில் பா.ஜ.க. செய்யும் அரசியல் ஆகும்.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசப்படும். இவ்வாறு அவர் கூறினார்.