சென்னை எழும்பூரில் முதியவருக்கு உதவி செய்த தலைமை காவலருக்கு பாராட்டு

சென்னையில், முதியவருக்கு உதவி செய்த, போக்குவரத்து தலைமை காவலரை, கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.;

Update: 2021-09-25 03:45 GMT

சென்னை எழும்பூர், லேங்ஸ் கார்டன் சாலை,   காந்தி இர்வின் பாலம் சந்திப்பில், நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர், மூன்று சக்கர சைக்கிளில், லோடுடன் பாலத்தில் ஏற சிரமப்பட்டார்.

அப்போது, அங்கு போக்குவரத்து பணியில் இருந்த தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், முதியவரின் சைக்கிளை தள்ளி உதவி செய்தார். இச்செயலை அங்கிருந்த வாகன ஓட்டிகள் பாராட்டினர். இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து தலைமை காவலர்  முத்துகிருஷ்ணனை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

Similar News