தமிழக சட்டசபை 29 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டுத்தொடர் வருகிற 13- தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது.;
சபாநாயகர் அப்பாவு.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் நடந்தது. இதில் வருகின்ற 13 தேதி பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது எனவும், அன்றைய தினமே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 14 தேதி வேளாண்துறைக்கு முதன் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.