சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள் செவிலியர்கள் தேர்வு..!

சென்னை மாநகராட்சி சார்பில் 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

Update: 2021-04-29 11:09 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் அதனைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புக்காக, மாநகராட்சி சார்பில் தலா 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

இவர்கள் ஓராண்டுகால ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மருத்துவர்களுக்கு மாத ஊதியமாக 60 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதற்கான நேர்காணல் இன்றும் நாளையும் ரிப்பன் மாளிகையில் நடக்கிறது. இன்று நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்பதற்காக 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை முதல் வரிசையில் காத்திருந்தனர்.

தேர்வு செய்யப்படுபவர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கோவிட் கேர் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நியமிக்கப்படுவார்கள். பணி நிரந்தரம் செய்யக்கோரி எவ்வித போராட்டத்திலும் ஈடுபட மாட்டோம் என்பதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெற்ற பிறகு பணி ஆணை வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News