தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் லீலைகள்: ஓட்டல் ஊழியர் கைது
தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் லீலைகள் செய்த ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;
தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் லீலைகளை செய்த வாலிபர் கைது.
சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருபவர் வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் வயது 18 ஓட்டல் நிர்வாகம் குறித்த படிப்பை முடித்த இவர் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயிற்சி பணியாளராக பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் தினம் தோறும் வில்லிவாக்கம் வீட்டிலிருந்து புறப்பட்டு எழும்பூர் ஓட்டலுக்கு வரும் வரை வழியில் தனியாக வரக்கூடிய பெண்களிடம் இவரது பாலியியல் சீண்டல் புத்தியை அரங்கேற்றுவது வழக்கம்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரின் அறுவருக்கக் தக்க ஆபாச லீலைகள் குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அவரை கைது செய்த திட்டமிட்டிருந்த நிலையில், அண்ணாநகர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் எழும்பூரிலிருந்து வில்லிவாக்கம் வரை பல பெண்களை இப்படி தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளது. மேலும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரக்கூடிய பெண்களை பார்த்து பார்த்து இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையானதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாலியல் வக்கிர சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த அண்ணா நகர் சட்ட ஒழுங்கு காவல்துறையினர், அனைத்து மகளிர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் தினேஷ்குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.