பாலியல் புகார்: சென்னை தடகள பயிற்சியாளருக்கு 11ம் தேதி வரை சிறை!
பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 11ம் தேதி வரை சிறையில் அடைக்க நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கும்போதே சென்னை பாரிமுனையில் உள்ள பிரைம் ஸ்போர்ட் அகாடமி நடத்தி வரும்தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தடகள வீராங்கனை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாகராஜன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெவளியாகியன.
கைதான நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை 11 ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.