பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் : ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக்கல்விதுறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.;
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளது.
மேலும் இதனை மாணவர்களை நேரடியாக பள்ளிகளுக்கு வரவழைத்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.