எம்ஜிஆர் உருவப்படத்திற்கு ஜெயக்குமார், அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி
சென்னை துறைமுகம் தொகுதியில், எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செய்தார்.;
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 34வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை துறைமுகம் பகுதிய்ல், எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் துறைமுகம் தொகுதியில், கன்னித்தாய் எம்ஜிஆர் மன்றம் சார்பில், ஏழைகளுக்கு பி ஜெயக்குமார் அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, நாகமணி, நடராஜன், கேப்டன் குணா, வெற்றிலை மாரி, ஆர் முனியப்பன், டி ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.