மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: வாழ்விட உரிமையை வலியுறுத்தி கிளர்ச்சி பிரச்சாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வாழ்விட உரிமையை வலியுறுத்தி கிளர்ச்சி பிரசாரம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வாழ்வுரிமையை வலியுறுத்தி மத்திய சென்னை மாவட்டத்தில் 6 இடங்களில் இன்று கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் புளியந்தோப்பு கே.பி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இதே போன்று தேனாம்பேட்டை. அயனாவரம். டிபி சத்திரம். சிந்தாதிரிப்பேட்டை. துறைமுகம் உள்ளிட்ட 5 இடங்களிலும் கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது.
புளியந்தோப்பில் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராமகிருஷ்ணன் அப்பகுதி மக்களிடம் பேசுகையில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்து புதிதாக கட்டப்படும் போது குடியிருக்கும் மக்களிடமிருந்து ஒன்றரை லட்சம் வசூலிக்கப்படுகிறது இது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை இதனை ரத்து செய்யவேண்டும்.
மக்களின் பாதுகாப்பையும் கட்டுமானத்தையும் உறுதி செய்ய வாரிய குடியிருப்புகளை பொதுப்பணித்துறை மூலம் கட்ட வேண்டும். உலக வங்கி மற்றும் ஆசிய வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
சாலையோரம் மற்றும் பிற பகுதியில் உள்ள மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி சென்னைக்கு வெளியே அனுப்பாமல் சென்னைக்கு உள்ளேயே அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு எழும்பூர் தொகுதி செயலாளர் முருகன் ஏற்பாடு செய்திருந்தார் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.