அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகலையடுத்து, எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.;

Update: 2021-07-20 07:46 GMT

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கேட்டறிந்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மதுசூதனனின் உடல்நிலையில் பின்னடவு ஏற்பட்டு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News