நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்; உயர் நீதிமன்றம் தடை
நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரு. 1 லட்சம் அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நுழைவு வரித் தொகை அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012 வழக்குத் தொடர்ந்தார் விஜய். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து, நடிகா் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து நடிகா் விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் என் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை, மதிக்கிறோம். காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம் என்று நடிகர் விஜய் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டது.