தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம்-புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்;

Update: 2021-11-03 00:00 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் திருவள்ளூர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர்,விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், தமிழகம்-புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது

Tags:    

Similar News