முழு ஊரடங்கு எதிரொலி: 8 சிறப்பு ரயில்கள் ரத்து

- தெற்கு ரயில்வே அறிவிப்பு.

Update: 2021-05-15 07:12 GMT

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைந்து உள்ளதால் 8 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு,

(02639) சென்னை சென்ட்ரல்-ஆலப்புழாவுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

(06630) மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

(06188) எர்ணாகுளம் சந்திப்பு-காரைக்காலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

(06729) மதுரை-புனலூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

ஆகிய 4 சிறப்பு ரெயில்கள் இன்று முதல் 31-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

(02640) ஆலப்புழா-சென்னை சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

(06629) திருவனந்தபுரம்- மங்களூர் சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

(06187) காரைக்கால் - எர்ணாகுளம் சந்திப்புக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

(06730) புனலூர்- மதுரைக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில்

ஆகிய சிறப்பு ரெயில்கள் மே 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

#SouthernRailway #cancelled #SpecialTrains #railway #CoronaFund #tamilnadu #chennai #egmore #coronaspread #allovertamilnadu #publicsuffering #SpecialTrainsCanceled #Curfew #corona #coronavirus #stayhome #staysafe #lockdown #quarentain #quarantine

Tags:    

Similar News