+2 மதிப்பெண்களில் அதிருப்தி; விருப்புத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு விருப்பத்தேர்வு வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.;

Update: 2021-07-23 06:35 GMT

பைல் படம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வை தமிழக அரசு ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. 12 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், அரசு அறிவித்த திட்டத்தின்படி மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதுவோர் தனியாக தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

அதன்படி, இந்த விருப்பத் தேர்வானது வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்திற்கு என்று விண்ணப்பிக்க முடியாது. கட்டாயமாக அனைத்து பாடத்திற்கும் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த விருப்பத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியான மதிப்பெண்ணாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது. விருப்பத்தேர்வுக்கான விண்ணப்பம் இன்று தொடங்கி வருகிற 27ம் தேதி வரை மாவட்ட வாரியாக அரசுதேர்வுத்துறை சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News