எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு மையத்தை தமிழக முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2021-06-20 13:37 GMT

சென்னை எழும்பூர் குழந்தைகள் சிறப்பு, சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு மையத்தை தமிழக முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மருத்துவ முறைகள் மற்றும் தேவைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.என் நேரு , உயர்கல்வித்துறை அமைச்சர்  க. பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வா.வேலு சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர்  பரந்தாமன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News