மகன் இறப்பு, பெற்றோருக்கு 48 லட்சம் இழப்பீடு

மகனை விபத்தில் இழந்த பெற்றோருக்கு, ரூ. 48 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-11 08:10 GMT
பைல் படம்

கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், 2015 ஆகஸ்டில், பெரும்பாக்கம் பிரதான சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த லாரி, ஸ்ரீராம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஸ்ரீராமின் பெற்றோர் ராமலட்சுமி மற்றும் ராமசாமி ஆகிய இருவரும், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆர்.வேல்ராஜ் முன் நடந்தது.

இறப்புக்கு, லாரியை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 48 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News