ஆதரவற்றோர் இல்லத்தில் 74 குழந்தைகளுக்கு கொரோனா..

சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆதரவற்றவர்கள் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-05-19 03:46 GMT

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாலவிஹார் ஆதரவற்றோர் இல்லத்தில்,  மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகள் 175 பேரில் 74 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இங்கு வருகை தந்த ஆசிரியர் ஒருவரின் மூலமாக குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என  தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News