கொரோனா 3-வது அலை அதிக ரிஸ்க்: டிஜிபி சைலேந்திரபாபு
கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.;
சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் சேமிப்பகத்தை தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திர பாபு அதன்பின்னர் நிருபர்களிடம் சந்திப்பில் கூறியதாவது:-
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவல்துறையின் பணி முக்கியமானது எனவும் கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கும் என்று தெரிவித்தார்.