நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் கலந்தாய்வு கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் கலந்தாய்வு கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது.;
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் சென்னை எழும்பூரில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அமைப்பின் மாநில தலைவர் டாக்டர் செ. பால் பர்ணபாஸ் தலைமை தாங்கினார், அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் தமிழ்நாடு மாநில தலைவரும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாவட்ட தலைவருமான டாக்டர் ஜான் இளங்கோவன் முன்னிலை வகித்தார், மாநில செயல் பொதுச் செயலாளர் பழனிகுமார் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் முக்கிய நிகழ்வுகளாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டங்களின் முக்கியத்துவங்களையும், தமிழக மக்களின் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளை முறியடிக்க தேவையான பயிற்சிகள், சாமன்யனின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் அமைப்பின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.