தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்க செப். 16ம் தேதி கடைசி நாள்

தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு, நாளை மறுதினத்தோடு (செப். 16) நிறைவடைகிறது.

Update: 2021-09-14 04:00 GMT

மாதிரி படம்

தமிழக தொல்லியல் துறை சார்பில், இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்படுகிறது. முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க, நாளை மறுதினம் (செப். 16,)  கடைசி நாள் ஆகும்.

இந்த படிப்பில் சேர, முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு வருகிற 25ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, நேர்முகத்தேர்வின் வாயிலாக 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அடுத்த மாதம், இப்படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த படிப்புக்கான விண்ணப்பங்களை www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,  நாளை மறுதினத்திற்குள் பூர்த்தி செய்து, 'ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை, - 8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, tnarchioa2021batch@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 044- - 2819 0020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News