அதிர்ச்சி ரிப்போர்ட்! சென்னையில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் ஒரே நாளில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

Update: 2021-05-19 15:35 GMT

கோப்பு படம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 6,297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News