2 டோஸ் செலுத்திய ஆண்கள், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் ரயிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய ஆண்கள் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.;

Update: 2021-09-02 17:30 GMT
2 டோஸ் செலுத்திய ஆண்கள், சென்னை  புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி

பைல் படம்

  • whatsapp icon

சென்னை புறநகர் ரயிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய ஆண்கள் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் என்றும் இவை உடனடியாக அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து மின்சார ரயிலில் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆண் பயணிகள் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெற்கு ரயில்வே முன்னதாக கட்டுப்பாடு விதித்து இருந்தது.

இந்நிலையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய ஆண் பயணிகள் முழு நேரமும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தென்னக ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி ரயில் பயணம் செய்ய 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News