குழந்தைகளுக்கு நெசவாளர்கள் மூலம் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி: அமைச்சர் காந்தி உறுதி!
தமிழக குழந்தைகளுக்கு ரசாயனப் பொருள் கலக்காமல் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி செய்யபடும் என கைத்தறி அமைச்சர் காந்தி உறுதியளித்தார்.
சென்னை எழும்பூர் கோ -ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து கைத்தறி அமைச்சர் காந்தி ஆலோசனை நடத்தினார்.. இந்த கூட்டத்தில் கைத்தறி துறை செயலாளர் அபூர்வா, கைத்தறி துறை ஆணையர் பிலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, கூட்டுறவு அங்காடிகளில் வாடிக்கையாளர்களுக்கு நன்மைதரும் பல திட்டங்கள் குறித்து செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஆலோசனை நடத்தினோம். பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கான ஆடைகள் வரை புதிய ரக வடிவமைப்புகள் அறிமுகபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
குழந்தைகளுக்கு ஏற்றவாறு ரசாயனப் பொருள் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்ய நெசவாளிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற முயற்சியில் அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.