திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கொள்கை : திட்டக்குழு உறுப்பினர் வரவேற்பு

திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொற்கால ஆட்சி இது என்றார் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ்

Update: 2021-10-15 03:34 GMT

 தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ் 

திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் கொள்கை வரைவு திட்டத்தை வரவேற்று  தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக நர்த்தகி நடராஜ் கூறினார்.

திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அனைவருக்கும் நலவாரியம் அமைத்து தொழில் முனைவோர்களாக உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், இதன் மூலம் திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம வாய்ப்பு கிடைக்கும் மற்றும் இது அவர்களுக்கு பொற்காலம் என தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ் கூறினார்.

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நட்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தோழி அமைப்பின் மூலம் சுய தொழில் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 40 திருநங்கைகளுக்கு 10 அரிசி மூட்டைகளை முதலீடாக வழங்கி தொடங்கி வைத்தார். திருநங்கைகள் ஒவ்வொருவரும் சுயமாக முன்னேற வேண்டும். திருநங்கைகள் சமூகத்துடன் இணைந்து வாழவேண்டும். சுய ஒழுக்கமும், சுய மரியாதையையும் தான் சமூகத்தில் நமக்கான மரியாதையை பெற்றுத்தரும் .

நான் திருநங்கை என்பதை 30 வருடங்களுக்கு முன்பே பெருமையுடன் அறிவித்தேன். எனது திறமையை வைத்தே எனக்கான வாய்ப்பை பெற்றேன். ஒரு போதும் நான் திருங்கை என்பதால் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்டதில்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது ,ஒரு விழாவில் திருநங்கை என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதை பார்த்து, திருநங்கை என சமூகத்திற்கே பெயர் சூட்டி அழகு பார்த்தார். திருநங்கை என்ற அழகான வார்த்தைக்கு இணையாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உருவாக்க முடியவில்லை என்பதில் பெருமிதம் கொள்வதாவரும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News