கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சர்வதேச பயணிகளுக்கு பல்வேறு தளா்வுகள் அமல்

சென்னை விமானநிலையத்தில் பயணிகளுக்கு 6 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்படும் ரேபிட் டெஸ்ட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-23 13:30 GMT

சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷணன்

கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து வருவதால் சென்னை விமானநிலைய சா்வதேச பயணிகளுக்கு பல்வேறு தளா்வுகள் அமலுக்கு வந்துள்ளன.ரேபிட் டெஸ்ட் முறை முழுமையாக நீக்கம்.12 வயதுக்குட்பட்ட சிறுவா்,மாற்று திரணாளி பயணிகளுக்கு பரிசோதனைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உட்பட உலக நாடுகளில் உச்சகட்டத்தில் இருந்த போது, சென்னை விமான நிலையத்தில் சா்வதேச விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி போன்ற நாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகள் பயணிகள் அனைவருக்கும் ரேப்பிட் டெஸ்ட் கண்டிப்பாக தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் விமான பயணிகள்,பயணத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு ரெபிட் டெஸ்ட் எடுத்து நெகடீவ் சான்றிதழ்கள் இருந்தால் தான் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். அதைப்போன்று ஐக்கிய அரபு நாடுகளிலும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இப்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாட்டில் பெருமளவு குறைந்து சகஜநிலையை திரும்பிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளா்த்தப்பட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை விமானநிலையத்தில் நேற்றிலிருந்து பயண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்படும் ரேபிட் டெஸ்ட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.. பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ்கள்,தேவைப்பட்டால் RT-PCR டெஸ்ட் நெகடீவ் சான்றிதழ் எடுத்தால் போதுமானது. ஆனால் இனிமேல் ரெபிட் டெஸ்ட் எந்த பயணிகளுக்கும் தேவையில்லை என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

அதோடு ஐக்கிய அரபு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு வரும் விமான பயணிகளுக்கு நேற்றிலிருந்து பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது.அதன்படி இனிமேல் 12 வயதுக்குட்பட்ட சிறுவா்களான பயணிகளுக்கு டெஸ்ட் தேவையில்லை.அதோடு மாற்றுதிறனாளி பயணிகளுக்கும் டெஸ்டிலிருந்து விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஐக்கிய அரபு குடியுறிமை பெற்றவா்களுக்கும் டெஸ்ட்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தளா்வுகள் சென்னை சா்வதேச விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதால்,பயணிகளிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் விமான பயணிகளில் 2% பயணிகளுக்கு RT PCR டெஸ்ட் எடுக்கும் முறை தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும்.எனவே சென்னை விமானநிலையத்தில் உள்ள பரிசோதனை கவுண்டா்கள் தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

Tags:    

Similar News