தமிழகத்தில் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் வர்த்தக மையம் அமைகிறது

தமிழகத்தில் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது.

Update: 2021-12-05 06:42 GMT

சோமாலிலாந்து நாட்டின் சிறப்பு பிரதிநிதிகளாக  நிமிக்கப்பட்ட அண்ணாமலை பாண்டியன், அப்துல் கனி

சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் துணைத் தலைவர் அப்திரஹ்மான் அப்தில்லாஹி இஸ்மாயில் முன்னிலையில் தீபம் மருத்துவமனையில் தலைவராக உள்ள அண்ணாமலை பாண்டியன் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் சிறப்பு பிரதிநிதியாக செயல்படுவார்

அதேபோல் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கான சிறப்பு ஆலோசகராக அப்துல்கனி செயல்படுவார் இவர்கள் இந்தியா மற்றும் சோமாலிலாந்து குடியரசு நாட்டிற்கு இடையே ஜவுளி மருந்து விவசாயம் மற்றும் பிற தயாரிப்புகளில் 4 ஆயிரத்து 870 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தக உறவை மேலும் உயர்த்தும் விதமாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோமாலிலாந்து குடியரசு நாட்டின் வர்த்தக மையத்தை தமிழகத்தில் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் அப்திரஹ்மான் அப்தில்லாஹி இஸ்மாயில் துணைத் தலைவர் சோமாலிலாந்து குடியரசு , ஹூசைன் மௌசா அல்-இஷாகி துணை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர், டாக்டர் ஜகாரியா தாஹிர் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் மற்றும் சுகாதார அமைச்சர், ஸ்கேலிங் அப் நியூட்ரிஷனின் தலைவர்,கவின்குமார் கந்தசாமி இயக்குனர், மங்கலம் கல்வி அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News