மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். (பைல் படம்)
தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராகப் பொறுப்பேற்ற அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் எல். முருகன், மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.