சிவசங்கர் பாபா டெல்லியில் கைது : சிபிசிஐடி போலீசார் தகவல்
சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.;
சென்னை: பாலியல் வழக்கில் தப்பியோடிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் சென்று அவரிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து விசாரணைக்காக டேராடூன் சென்றபோது தனியார் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பிச் சென்றது தெரியவந்தது. பின்னர் உத்தரகாண்ட் மற்றும் டெல்லியில் அம்மாநில போலீசாருடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்ததாகவும் விரைவில் சென்னை அழைத்துவரப்பட உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.