காழ்ப்புணர்ச்சி காரணமாக நகைக்கடன் விவகாரத்தில் தவறான தகவல்:அமைச்சர் பெரியசாமி
அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தாமலேயே கூட்டுறவு சங்கங்களின் பதவிகளில் அதிமுகவினர் அமர்த்தப்பட்டனர்
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நகை கடன் விவகாரத்தில் தவறான கருத்துகளை பேரவையில் பதிவிட்டு வருகிறார் என குற்றம்சாட்டினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.
சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது: சேலத்தில் விவசாயிகள் பயிர்கடன் பெறுவதில் முறைகேடு ஏற்ப்பட்டுள்ளது. வெவேறு பயிர்களுக்கான கடன் பெறுவதில் மோசடி நடைபெற்றுள்ளது. இதற்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தாமலேயோ கூட்டுறவு சங்கங்களின் பதவிகளில் அதிமுகவினர் அமர்த்தப்பட்டனர்.
வேண்டும் என்றே தற்போது நடைபெரும் நல்லாட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேரவையில் எதிர்கட்சியினர் பேசி வருகின்றனர்.100 கணக்கானோர் 5 பவுனுக்கு மேலாக நகைக்கடன் பெற்றுள்ளனர். இதற்கு எப்படி தள்ளுபடி தர முடியும். போலி நகை அடமானம் வைப்பது, ஒரே ஆதார் அட்டை மூலமாக பல முறை நகை கடன் பெருவது போன்ற பல முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் உண்மைக்குப் புறம்பான திட்டங்களை அறிவித்ததுடன் அவை அனைத்தும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமன்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.