3வது அலை பயமில்லை: காசிமேட்டில் மீன்களை வாங்க அலை மோதிய மக்கள்

கொரோனா பரவல் குறித்த பயமின்றி, சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-09-12 05:30 GMT

சமூக இடைவெளியை மறந்து, சென்னை காசிமேடு மீன் சந்தையில் திரண்ட மக்கள். 

சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் பொதுவாக மீன்களை வாங்குவதற்கு மொத்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமாக கூடுவது வழக்கம். அதேபோல் இந்த வாரமும் மீன்களை வாங்குவதற்கு, சமூக இடைவெளி, தொற்று பரவல் அச்சமின்றி  ஏராளமானோர் கூடினர்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல்,  புரட்டாசி மாதம் தொடங்குவதால், பலரும் அசைவ உணவை தவிர்ப்பார்கள். அதனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையான இன்று,  ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்காக காசிமேடு மீன் விற்பனை கூடத்திற்கு வந்தனர். கடந்த இரண்டு தினங்களாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீன் விற்பனை கூடத்தில் விற்பனை குறைவாக காணப்பட்டதால்,  இன்று மீன் பிரியர்கள் மீன்களை வாங்க ஆர்வத்துடன் வந்து சென்றனர்.

கடந்த சில நாட்களாக மீன்களின் விலை ஏற்றத்துடன் காட்டப்பட்ட நிலையில், இன்று மீன்களின் விலை குறைவாகவே இருந்தது. சிறிய வகை சங்கரா மீன் கூடை, 1800 ரூபாயாகவும், பெரிய வகை சங்கரா மீன் 3000 ரூபாயாகவும் இருந்தது. கானகத்தை 1500 ரூபாய், எறா 2000 ரூபாய், நண்டு 2,500 ரூபாய், பெரிய வகை மீன்களான பர்லா, கேரை, சூரை போன்ற மீன்கள் ஒரு மீன் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News