குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை தடுக்க இணைய வழி விழிப்புணர்வு திட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் கொரோனா காலகட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.;
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் விதமாக மாணவர்களின் வருகை பதிவேடு முறையாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் சுதன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் கொரோனா காலகட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் சுதன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை தடுக்க இணைய வழி விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் விதமாக தினசரி வருகை பதிவேடு ஆய்வு செய்யப்படுவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, பள்ளியிலிருந்து இடைநின்ற 1.4 லட்சம் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இடைநின்ற 1.3 லட்சம் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 80 சதவீத குழந்தைகள் தற்போது பள்ளிகளுக்கு வருவதாகவும், குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வர இல்லம் தேடி கல்வி திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இடை நிற்றல் சதவீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.