பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரி ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.

Update: 2021-06-19 05:14 GMT

பள்ளிகள் மதிய உணவு திட்டத்திற்கு ஜிஎஸ்டி வரி ரத்து

நாடு முழுவதும் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் உணவு வழங்கும் சேவைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-ஆவது கூட்டம், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை சிபிஐசி வெளியிட்டுள்ளது.

அதாவது, கல்வி நிலையங்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் எந்தொரு சேவைக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அங்கன்வாடிகள், முன்பருவப் பள்ளிகள் ஆகியவையும் கல்வி நிலையங்களாகவே கணக்கில் கொள்ளப்படும்.

மதிய உணவுத் திட்டத்தை அரசு நிதி அல்லது பன்னாட்டு நிறுவனத்தின் நன்கொடை மூலமாக செயல்படுத்தினால் அதற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News