தண்டையார்பேட்டையில் 60 ஆக்சிஜன் படுக்கை - உதயநிதி திறந்து வைத்தார்!

சென்னை தண்டடையார்பேட்டையில் 60 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2021-05-27 06:13 GMT

சென்னை தண்டையார்பேட்டையில் 60 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை  உதயநிதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் 60 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதை தி.மு.க. இளைஞரணி செயலரும் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில், மாணவியர் உட்பட பலர், முதல்வர் பொது நிவாரண நிதி வழங்கினர். மேலும் முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.எஸ்.டி.ராஜா பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் அவசர ஊர்திகளும் வழங்கப்பட்டன. இவற்றை, உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜே.ஜே.எபினேசர், வட சென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News