சென்னை மாநகராட்சி திமுக வசமானது - 15 இடங்களில் அதிமுக வெற்றி

சென்னை மாநகராட்சி தேர்தலில் 153 இடங்களை கைப்பற்றி, திமுக மீண்டும் வசப்படுத்தியது.;

Update: 2022-02-23 01:30 GMT

பைல் படம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவி தேர்தலில், ல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர்.

இந்நிலையில், திமுக கூட்டணி, 153 இடங்களை பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்திலும், மற்றவை 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி திமுக வசம் வந்துள்ளது. மாநகராட்சி உறுப்பினர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 4-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

Tags:    

Similar News