தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ரெம்டிசிவிர் மருந்துகள் விநியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது நிறைவு பெற்ற நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, தனியார் மருத்துவர்கள் ரெம்டிசிவிர் மருந்தை அதிகம் பரிந்துரைப்பதால் மருத்துவமனைகளில் மக்கள் அதிகம் கூடுகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க இனி தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவர் மருந்து விநியோகம் செய்ய அனுமதி அளிப்பதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.