வயது வரம்பை உயர்த்தி ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்: அரசாணை வெளியீடு
வயது வரம்பை உயர்த்தி ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யும் விதியில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
வயது வரம்பை உயர்த்தி ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யும் விதிகளை மறுவெளியீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 என்றும் இதர பிரிவுகளுக்கு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர், கணினி பயிற்றுநர்கள் ஆகிய பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 வயது விதவை பெண்களுக்கு 45 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் பணி தேடுபவர்கள் நலனை கருத்தில் கொண்டு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும் , இதர பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் உயர்த்த வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் தமிழக அரசை அறிவித்துள்ளது.