சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை அமைச்சர் தொடங்கி வைப்பு
சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.;
சென்னையில் நடமாடும் பல் மருத்துவமனை சேவையை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் அமைச்சர் சேகர்பாபு.
சென்னை அரசு பல் மருத்துவமனையில் இன்று (18.10.21) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 'நடமாடும் பல் மருத்துவ வாகனம்' தொடங்கி வைக்கப்பட்டது.
நடமாடும் பல் மருத்துவமனை சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்.
நாளையும், நாளை மறுநாளும் சென்னையின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூலம் பல் மருத்துவ சேவை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.