இனி நேரு உள் விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை - தமிழக அரசு அறிவிப்பு
இனிமேல் நேரு உள் விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.;
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் தற்போது மாற்றப்பட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இனி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.