சென்னையா இது? என்னய்யா இது? ஊரடங்கு எதிரொலி: வெறிச்சோடிய சென்னை

ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிப்பால் சென்னை முழுவதும் சாலைகள் காற்று வாங்கியது.;

Update: 2021-04-25 11:11 GMT

கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி கிடக்கும், சென்னை சாலைகள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சென்னையில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலைகள், கோயம்பேடு காய்கறி சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

முழுஊரடங்கு காரணமாக உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு முக்கிய உணவகங்கள் முன் ஸ்விக்கி, சொமாட்டோ ஊழியர்கள் காத்திருந்து உணவைப்பெற்று விநியோகம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதை கண்காணிக்க சாலை

சென்னையா இது?த்தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தேவையின்றி வாகனங்கள் வந்தால் எச்சரித்தும், அபராதம் விதித்தும் அனுப்பி வைக்கின்றனர். சில இடங்களில் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News