சென்னையில் கொரோனா தாக்கம் குறைகிறது: சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா தொற்றின் தாக்கம் சென்னையில் குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Update: 2022-01-23 10:30 GMT

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்,

தமிழகத்தில் டிசம்பரில் 100ல் ஒருவருக்கு என்கிற விகிதத்தில் இருந்த இறப்பு விகிதம், தற்போது 1000ல் ஒருவர் என்கிற விகிதத்தில்  குறைந்துள்ளது. 2வது அலையின் போது 500 மெட்ரிக் டன் என்கிற அளவில் இருந்த ஆக்சிஜன் தேவை, தற்போது 117 மெட்ரிக் டன் அளவு மட்டுமே தேவை என்கிற அளவில் குறைந்துள்ளது. 

 சென்னையில் கொரானா தாக்கம் உயர்ந்து தற்போது இறங்கியுள்ளது, இருப்பினும் சோளிங்கநல்லூர் மணலி, அம்பத்தூர் மாதவரம் ஆகிய மண்டலங்களில் தொற்றை குறைப்பதில் சவாலாக உள்ளது. சென்னையை பொருத்தவரை தொற்று குறைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் கொரானா தாக்கம் இறங்குமுகமாக இருந்தால் மட்டுமே கர்நாடகவை போன்று வார இறுதி நாள் ஊரடங்கை கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News