வைரமுத்து திருமண மண்டபத்திற்கு சீல்?
கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதனால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது .
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கவிஞர் வைரமுத்து தனது மனைவியின் பெயரில் பொன்மணி மாளிகை என்ற திருமண மண்டபத்தினை கட்டியிருக்கிறார். கடந்த 1995ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த திருமண மண்டபம், கடந்த 27 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி ரூபாய் எட்டு லட்சம் நிலுவையில் இருந்ததால், வைரமுத்துவிற்கு சென்னை மாநகராட்சி அவ்வப்போது நோட்டீஸ் அனுப்பி வந்துள்ளனர். நான்கு வருடங்களாக நோட்டீஸ் கொடுத்து வந்தும் மாநகராட்சி சொத்து வரியை செலுத்தாமல் வைரமுத்து காலம் கடத்திக் கொண்டே வந்திருக்கிறார். இதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
வைரமுத்துவின் பொன்மணி மாளிகை திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதை அடுத்து அவசர அவசரமாக நிலுவையில் இருந்த சொத்து வரி வைரமுத்து தரப்பில் உடனே செலுத்தினர். இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட்டனர்