கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்
-சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்
சென்னை ராமாபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, அவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை செய்யும் மையத்தின் நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினமும் சுமார் 2,500 பேருக்கு மேல் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொற்று குறைந்ததற்கு, பரிசோதனைகளை அதிகரித்ததும் ஒரு காரணம். அதனால் தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதை 25 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.